மாவட்ட செய்திகள்

150 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, உதவித்தொகை; ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார் + "||" + Rice, subsidy to 150 auto drivers; G. Venkatajalam MLA Presented

150 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, உதவித்தொகை; ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்

150 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, உதவித்தொகை; ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 150 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, உதவித்தொகையை ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
சேலம்,

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சேலம் மாநகர, மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகர அ.தி.மு.க. சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவித்தொகை, காய்கறிகள், மளிகை தொகுப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறது.


நேற்று காலை சேலம் ஜங்ஷன், பழைய சூரமங்கலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானா ஆகிய பகுதிகளில் உள்ள 150 ஆட்டோ டிரைவர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி புது ரோடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆட்டோ டிரைவர்களுக்கு உதவித்தொகை, அரிசியை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் வெங்கடாஜலம், ஜனா, ராமசாமி, அன்பு, தளபதி சரவணன், செல்வம், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டுக்கோட்டையில் 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வியாபாரி கைது
பட்டுக்கோட்டையில், 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
2. கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது
கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
3. அரிசி, தேங்காய் வியாபாரிகளுக்கு கொரோனா எதிரொலி: வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டி தெருவில் சுகாதார பணிகள்
அரிசி, தேங்காய் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டிதெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அங்கு கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
4. தஞ்சையில் 880 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது
தஞ்சையில் 880 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக நகராட்சி முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2,600 டன் அரிசி ஈரோட்டுக்கு வந்தது
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2,600 டன் அரிசி ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.