திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிக்கு கொரோனா திண்டுக்கல்லை சேர்ந்தவர்


திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிக்கு கொரோனா திண்டுக்கல்லை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 27 May 2020 10:20 AM IST (Updated: 27 May 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, 

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரோலில் விடுவிப்பு

திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகள் பலர் பரோலில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கைதி ஒருவர், கடந்த 2015-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் உள்பட 5 பேர் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி, அதாவது ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே சென்னை புழல் சிறைக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, தண்டனை காலம் முடிந்த பின்னர், திருந்தி வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும், சுயதொழில் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

கைதிக்கு கொரோனா

பின்னர் கடந்த 22-ந்தேதியன்று, சென்னை புழல் சிறையில் இருந்து 5 பேரும் பயிற்சி முடித்து திருச்சி மத்திய சிறைக்கு திரும்பினர். இங்கு 5 பேருக்கும், சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவர்களில் திண்டுக்கல் ஆயுள் தண்டனை கைதிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 4 பேருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

Next Story