வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது


வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2020 11:34 AM IST (Updated: 27 May 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி,

பண்ருட்டி அன்வர்ஷா நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 31 வயதுடைய இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூரை சேர்ந்த ராமசாமி மகன் கோபால்சாமி(வயது 38), சுந்தரமூர்த்தி மகன் சுபாஷ்(26) ஆகியோர் என்பதும், அன்வர்ஷா நகரில் வசித்து வரும் 54 வயதுடைய ஒரு பெண்ணின் வீட்டில் வைத்து விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 31 வயது பெண், விபசாரம் நடத்த வீடு கொடுத்த 54 வயதுடைய பெண் மற்றும் கோபால்சாமி, சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story