பண்ருட்டியில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் 103 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
பீகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 103 தொழிலாளர்கள், பண்ருட்டி திருவதிகை, மருங்கூர், வேகாக்கொல்லை, பணிக்கண்குப்பம், கண்டரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
பண்ருட்டி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். மேலும் அவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். மேலும் அவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், திருச்சியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரெயிலில் தொழிலாளர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் பண்ருட்டியில் இருந்து திருச்சி செல்ல வாகன வசதி இல்லாததால் தொழிலாளர்கள் தவித்தனர். இது பற்றி அறிந்த மருங்கூர் வி.எம்.குரூப்ஸ் அதிபரும், அகில இந்திய முந்திரி உற்பத்தியாளர்கள் சங்க தலைவருமான வீரவிஸ்வாமித்திரன் தனது சொந்த செலவில் தொழிலாளர்களை திருச்சிக்கு பஸ்களில் அனுப்பி வைக்க முடிவு செய்தார்.
அதன்படி நேற்று அதிகாலை 3 பஸ்களில் 103 தொழிலாளர்களும் திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு பொருள்கள், குடிநீர், பிஸ்கட் ஆகியவையும் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் வி.எம்.குரூப்ஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரனுக்கு பண்ருட்டி தாசில்தார் உதயகுமார் நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story