என்.எல்.சி. ஊழியர் உள்பட 4 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 436 ஆக உயர்வு
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. ஊழியர் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 432 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 236 பேரின் உமிழ் நீர் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சென்னைக்கு சென்று வந்த முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவருக்கும், சிதம்பரம் தாலுகா நாஞ்சில் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண்ணுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 2 பேரில் ஒருவர் கடலூர் செம்மண்டலம் தண்டபாணி நகரைச் சேர்ந்த 30 வயது பெண். இவர் கடலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த பெண் வசித்து வந்த நகருக்குள் யாரும் செல்லாத வகையில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சீல் வைத்து, வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்தனர். மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து தண்டபாணி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் நெய்வேலியை சேர்ந்த 46 வயதுடைய என்.எல்.சி. ஊழியர். இவர் கடந்த வாரம் நிகழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். தற்போது இவர் நெய்வேலியில் உள்ள அவரது சொந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களையும் சேர்த்து கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 432-ல் இருந்து 436 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story