வீட்டின் சமையல் அறையில் கியாஸ் சிலிண்டரில் தஞ்சம் புகுந்த பாம்பு
கோடை காலமான தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் வெப்பம் தாங்க முடியாமல் சிறிய உயிரினங்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றன. இதனால் பாம்புகளும் சற்று குளிர்ச்சியான பகுதியை நோக்கி படைஎடுக்கின்றன.
ஈரோடு,
காட்டுப்பகுதியில் உள்ள பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த பாம்பு சமையல் அறைக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து அவர்கள் பாம்பு பிடிக்கும் இளைஞரான யுவராஜாவுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அவர் அங்கு விரைந்து சென்று வீட்டின் சமையல் அறையில் பாம்பை தேடிப்பார்த்தார். அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தி பார்த்தும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கியாஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தியபோது அதன் அடிப்பகுதியில் உள்ள இடுக்கில் பாம்பு சுருண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 2½ அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை யுவராஜா லாவகமாக பிடித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 2 வாரங்களில் 16 வீடுகளில் இருந்த பாம்புகளை பிடித்து உள்ளேன். நாம் எதிர்பார்க்காத மிக சிறிய இடத்திலும் கூட பாம்பு சென்று சுருண்டு கிடக்கும். எனவே பொதுமக்களும் விழிப்புடன் இருப்பது அவசியம்”, என்றார்.
Related Tags :
Next Story