கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதியில் ஆட்டோவில் மூலிகை தேனீர் வினியோகம் - அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
கொரோனா தொற்று அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் ஆட்டோவில் மூலிகை தேனீர் வினியோகத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் கபசுர குடிநீர் மற்றும் மூலிகை தேனீர் ஆகியவற்றை ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வினியோகிக்கும் பணியை அமைச்சர் டி.ஜெயகுமார் ராயபுரத்தில் உள்ள பாரதி பெண்கள் கல்லூரி வளாகத்தில் வைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கொரோனா தொற்று நோய் தடுப்பு சென்னை மண்டல சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் கணேஷ், சித்தா டாக்டர் கே.வீரபாபு ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை அமைச்சர் ஜெயக்குமார் வேப்பிலை கிளையை கையில் வைத்து அசைத்து தொடங்கி வைத்ததுடன், ஆட்டோவை தானே ஓட்டி அசத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் எண்ணிக்கை அடர்த்தியாக உள்ள இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சவாலாக இருந்து வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு 50 லட்சம் முகக் கவசம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 16 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் மருத்துவ ரீதியான உதவிகளையும் சென்னை மாநகராட்சி துரிதமாக வழங்கி வருகிறது. கொரோனா நோய்தொற்று அதிகம் பரவியுள்ள ராயபுரம் போன்ற பகுதிகளில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா நோய் தொற்றுக்கும் மருந்து விரைவில் கண்டறியப்படும். அதுவரை தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர், மூலிகை தேனீர் உள்ளிட்ட இந்திய மருந்துகளால் பக்க விளைவுகள் இல்லை. மக்கள் பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறும்போது, தற்போது சென்னையில் 458 தடை செய்யப்பட்ட பகுதிகள் உள்ளன. 750 மேற்பட்ட பகுதிகளில் தடை நீக்கப்பட்டுள்ளது. 28 நாட்களில் புதிய தொற்று ஏற்படாது இருந்தால் மட்டுமே ஒரு பகுதியில் தடை நீக்கப்படும். 1,250 ஆக இருந்த தடை செய்யப்பட்ட பகுதிகள் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. நோய் தொற்று சென்னையில் கட்டுக்குள் வருவதற்கு இது உதாரணம் என்றார்.

Related Tags :
Next Story