அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தற்கொலை
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி, புழல் சிறையில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றம்,
சென்னை புளியந்தோப்பு காந்திநகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 41). அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்தபோது, அங்கு இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இவர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பழனிக்கு கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
அன்று முதல் புழல் தண்டனை சிறையில் பழனி அழைக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களாக பழனி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் 3 மணி அளவில் புழல் சிறையில் உள்ள கழிவறைக்கு சென்ற பழனி, தனது போர்வையை கிழித்து கயிறாக திரித்து கழிவறை ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் சிறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சிறை போலீசார் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story