மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா நோயாளி தற்கொலை - ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கினார் + "||" + Corona patient suicide in Chennai - hung himself to death in hospital

சென்னையில் கொரோனா நோயாளி தற்கொலை - ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கினார்

சென்னையில் கொரோனா நோயாளி தற்கொலை - ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கினார்
சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் ஆஸ்பத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரைச் சேர்ந்த வக்கீல் குமாஸ்தா ஒருவர் கடந்த 25-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 57 வயது நிரம்பிய அவர் சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை அவர் ஆஸ்பத்திரியின் கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை. நீண்ட நேரம் கழிவறை திறக்கப்படாமல் இருந்ததால் மற்ற நோயாளிகள் கழிவறை கதவை உடைத்து திறந்து பார்த்தனர்.


அப்போது அவர் கழிவறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். ஏற்கனவே நேற்று முன்தினம் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பத்திரிக்குள் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்
சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
2. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 20,271 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு
சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.