புதுவையில் காய்கறி விலை வீழ்ச்சி
புதுச்சேரியில் தேவை குறைந்ததால் காய்கறி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்தது. அதன்பின் விளைச்சல் அதிகரிப்பு மற்றும் தேவை குறைந்ததால் காய்கறி விலை படிப்படியாக குறைந்தது. அதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காய்கறி விலை குறைந்தே காணப்படுகிறது.
அதன்படி நேற்றைய தினம் ஒருகிலோ தக்காளி ரூ.8, கத்தரி ரூ.10, வெண்டைக்காய் ரூ.5, கேரட் ரூ.25, பீன்ஸ் ரூ.75, உருளைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.20, நூக்கல் ரூ.40, வெங்காயம் ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.45, குடை மிளகாய் ரூ.50, பீட்ரூட் ரூ.35, சவ்சவ் ரூ.25, முட்டைகோஸ் ரூ.10 என விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் விற்பனையாகாமல் அழுகி வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறி கள் மார்க்கெட் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளில் வீசப்படுகிறது.
இந்த விலை குறைவு தொடர்பாக காய்கறி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
புதுவையில் பெரும்பாலான ஓட்டல்கள் மூடிக்கிடக்கின்றன. சுபமுகூர்த்த மாதமாக இது இருந்தாலும் திருமணங்களில் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே விருந்து, விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது. இருந்தபோதிலும் விளைச்சல் அதிகமாக உள்ளது. புதுவைக்கு வழக்கம் போல் காய்கறிகள் வந்த வண்ணம் உள்ளன. காய்கறிகள் அதிகம் வருவதாலும் தேவை குறைந்துள்ளதாலும் விலை மலிவாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story