மத்திய அரசு கொண்டு வரும் மின்சார ஒழுங்குமுறை சட்ட திருத்தம் குறித்து ஆலோசித்து முடிவு - டி.கே.சிவக்குமார் பேட்டி
மத்திய அரசு கொண்டு வரும் மின்சார ஒழுங்குமுறை சட்ட திருத்தம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தையொட்டி கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு நேருவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“கோவில்களை திறப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். இது கர்நாடக அரசின் முடிவு. இதில் நாங்கள் என்ன செய்ய முடியும். அவர் எங்களை ஒன்றும் கேட்கவில்லை. எல்லாவற்றுக்கும் முதல்-மந்திரியே பொறுப்பு. விவசாயிகள், தொழிலாளர்களை இந்த ஆட்சியை நடத்துபவர்கள் எப்படி நடத்தினர் என்பது எங்களுக்கு தெரியும்.
உணவகங்களை திறக்க...
மின்சார ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சரியல்ல. இதுகுறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசிக்க உள்ளோம். அங்கு ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம்.”
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் நிருபர்களிடம் கூறும்போது, “கோவில், மசூதி, கிறிஸ்தவ ஆலயங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது ஒன்றும் தவறு அல்ல. ஆனால் பணத்திற்காக கோவில்களை திறந்தால் அது தவறு. ஓட்டல்கள், உணவகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்.
கொரோனா பாதிப்பு
அதில் பணியாற்றுபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள். அதனால் அவர்கள் பயன் பெறட்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு மாதிரி நகரமாக இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். அவர் கூறிய விஷயங்களில் இது ஒன்று மட்டுமே உண்மை. ஏனென்றால் குஜராத் பற்றி அவர் எங்கும் குறிப்பிடவில்லை. அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது” என்றார்.

Related Tags :
Next Story