மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரதிபுரத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பச்சியப்பன் ராஜா, வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி சக்திவேல் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதேபோல் பிக்கிலியில் வட்டார தலைவர் சின்னசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சின்னராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தடைசெய்யும் சட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு,குறு விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சிவராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனி, மாதர் சங்க தலைவர் சுபத்ரா, சங்க நிர்வாகிகள் ரஜினி, பெருமாள், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முனியன், இளைஞர் மன்ற தலைவர் சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, தனியார் மயமாக்கும் மின்சார திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கொரோனா ஊரடங்கின் காரணமாக வீணாகி போன விவசாய விளை பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் வாழ்வாதார பாதுகாப்பிற்கு ஊரடங்கு கால நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும். விவசாய இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story