நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 2 நாட்கள் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (வியாழக்கிழமை) 4 மி.மீட்டரும், நாளை (வெள்ளிக்கிழமை) 20 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ.வேகத்தில் வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக முறையே 104 மற்றும் 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரபதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 2 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோழிகளை இடமாற்றம் செய்தல், அலகு வெட்டுதல் மற்றும் தடுப்பூசி அளித்தல் போன்றவற்றை இரவு நேரத்தில் அல்லது பகற்பொழுதின் குளிர்ந்த நேரத்தில் செயல்படுத்த வேண்டும்.
வெப்பத்தினால் ஏற்படும் அயற்சியை போக்கும் வகையில் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை பசுக்களுக்கு எல்லா நேரங்களிலும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story