மதுரை மத்திய சிறையில் 5 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை


மதுரை மத்திய சிறையில் 5 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 28 May 2020 4:34 AM GMT (Updated: 28 May 2020 4:34 AM GMT)

மதுரை மத்திய சிறையில் 5 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரை,

மதுரை மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் நடைபெற்ற ஒரு பயிற்சிக்காக தமிழகத்தில் பல்வேறு சிறையில் இருக்கும் கைதிகள் அங்கு சென்றனர். அதில் கலந்து கொள்ள மதுரை மத்திய சிறையில் இருந்து 5 கைதிகள் சென்றனர். இதற்கிடையில் சென்னையில் கொரோனா அதிக அளவு பரவிய காரணத்தினால் பயிற்சி நிறுத்தப்பட்டது. மேலும் பயிற்சிக்கு வந்த கைதிகளை உடனே அவர்களுக்குரிய சிறைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னைக்கு சென்ற மதுரை கைதிகள் 5 பேர் திரும்பி வந்தனர்.

இந்த நிலையில் சென்னைக்கு பயிற்சிக்கு சென்ற கைதிகளை பரிசோதனை செய்து பார்த்த போது திருச்சியில் ஒரு கைதி, கடலூரில் 2 கைதி என 3 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து சென்னைக்கு பயிற்சிக்கு சென்ற அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி மதுரையில் இருந்து சென்னை சென்ற 5 கைதிகளுக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாட்களில் வந்து விடும். அதன்பின்னர் தான் மதுரை கைதிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதாக என்பது தெரியவரும்.

Next Story