விழுப்புரம் மாவட்டத்தில் 8 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 8 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையோடு இணைத்ததை கைவிட வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வரி பாக்கியையும், கொரோனா நிவாரண நிதியையும் உடனே வழங்க வேண்டும், விவசாயிகளின் நிலுவையில் உள்ள அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சார சட்டம் 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஏழுமலை, ஆனந்தன், வட்ட செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் மணி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் ஒலக்கூரில் வட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையிலும், மயிலத்தில் ஒன்றிய தலைவர் கமலக்கண்ணன் தலைமையிலும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் ஒன்றிய செயலாளர் சகாபுதீன் தலைமையிலும், காணையில் வட்ட செயலாளர் நாகராஜ் தலைமையிலும், திருவெண்ணெய்நல்லூரில் மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி தலைமையிலும், செஞ்சியில் மாவட்டக்குழு நிர்வாகி மாதவன் தலைமையிலும், சரவணப்பாக்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கோதண்டபாணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திருவெண்ணெய்நல்லூரில் விவசாய சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நாராயணன், நகர செயலாளர் முருகன் உள்பட 15 பேரையும், செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் மாதவன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க துணை தலைவர் குண்டுரெட்டியார் உள்பட 11 பேரையும், சரவணப்பாக்கத்தில் 9 பேரையும் ஆக மொத்தம் 35 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story