கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது


கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 28 May 2020 10:34 AM IST (Updated: 28 May 2020 10:34 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொங்கு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருபவர்களை மையத்தின் நுழைவு வாயில் அருகே வெப்பமாணி மூலம் உடல் வெப்பத்தை அளவீடு செய்து அதன் பின் அவர்கள் கிருமிநாசினி மூலம் தங்களின் கைகளை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் முககவசங்களும் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.

1,024 பேர் ஈடுபட்டனர்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 2 மையங்களில், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில், 984 முதுகலை ஆசிரியர்களும், 10 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், 30 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 1024 பேர் ஈடுபட்டு உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு அறைக்கு 8 நபர்கள் வீதம் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து அறைகளும் இரு வேளைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இப்பணியை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தால் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கரூரில் இருந்து வந்து செல்ல 6 வழித்தடங்களிலும், வெளிமாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் வந்து செல்ல 3 வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றனர்.

Next Story