ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.
ஈரோடு,
ஈரோடு கல்வி மாவட்டத்தில் 109 முதன்மை தேர்வாளர்கள், 109 கூர்ந்தாய்வாளர்கள் மற்றும் 654 உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 872 தேர்வாளர்களும், கோபி கல்வி மாவட்டத்தில் 66 முதன்மை தேர்வாளர்கள், 66 கூர்ந்தாய்வாளர்கள், 396 உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 528 தேர்வாளர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு ஆசிரியர்கள் வருவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும் கிருமி நாசினி கொண்டு தங்களது கைகளை சுத்தம் செய்த பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் வாகனத்தில் எடுத்து வரப்பட்டன. இந்த விடைத்தாள்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் மையத்துக்குள் எடுத்துச்சென்றனர். பின்னர் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணியை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார். அப்போது அவர் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்பட்டு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனரா? சமூக இடைவெளியுடன் ஒரு அறைக்கு 8 பேர் மட்டும் பணியில் உள்ளனரா? என்றும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி 12 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி நிறைவடைந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சென்னை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி, ஈரோடு கல்வி மாவட்டத்தில் முதன்மை மையமாக ஈரோடு இந்து கல்வி நிலையத்திலும், துணை மையங்களாக எஸ்.வி.என். மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், கோபி கல்வி மாவட்டத்தில் முதன்மை மையமாக சாரதா மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், துணை மையங்களான சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் பழனியம்மாள் மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் என மொத்தம் 6 மையங்களில் நேற்று தொடங்கியது.
ஈரோடு கல்வி மாவட்டத்தில் 109 முதன்மை தேர்வாளர்கள், 109 கூர்ந்தாய்வாளர்கள் மற்றும் 654 உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 872 தேர்வாளர்களும், கோபி கல்வி மாவட்டத்தில் 66 முதன்மை தேர்வாளர்கள், 66 கூர்ந்தாய்வாளர்கள், 396 உதவி தேர்வாளர்கள் என மொத்தம் 528 தேர்வாளர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு ஆசிரியர்கள் வருவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும் கிருமி நாசினி கொண்டு தங்களது கைகளை சுத்தம் செய்த பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்கள் வாகனத்தில் எடுத்து வரப்பட்டன. இந்த விடைத்தாள்களை திருத்துவதற்காக ஆசிரியர்கள் மையத்துக்குள் எடுத்துச்சென்றனர். பின்னர் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.
ஈரோடு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணியை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார். அப்போது அவர் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்பட்டு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனரா? சமூக இடைவெளியுடன் ஒரு அறைக்கு 8 பேர் மட்டும் பணியில் உள்ளனரா? என்றும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி 12 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story