தனியார் மயமாக்க எதிர்ப்பு; மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தனியார் மயமாக்க எதிர்ப்பு; மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 May 2020 4:04 AM IST (Updated: 29 May 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரி யூனியன் பிரதேசமின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

திருபுவனை,

திருபுவனை மின்துறை அலுவலக வளாகத்தில் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், செயல் தலைவர் கண்ணன், சிறப்பு ஆலோசகர் ராமசாமி, பொருளாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுவை யூனியன் பிரதேச மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை புதுவை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மின்துறை ஊழியர்கள் மூலம் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

மின்கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். தொழில் முடங்கும் நிலை உருவாகும். விவசாயிகளின் இலவச மின்சாரத்தை தடை செய்தால் விவசாயம் பாதிக்கப்படும் என வலியுறுத்தினர்.

Next Story