சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: போலீசுக்கு பயந்து விடுதி மேலாளர் தற்கொலை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: போலீசுக்கு பயந்து விடுதி மேலாளர் தற்கொலை
x
தினத்தந்தி 29 May 2020 4:16 AM IST (Updated: 29 May 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்ற விடுதி மேலாளர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால்.

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 55.) குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் மேலாள ராக பணியாற்றினார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோட்டுச்சேரிக்கு விஜயன் வந்தார்.

நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார். அங்கு அவர் இல்லாததால் விஜயன், தனது நண்பரின் 12 வயது மகளிடம் நைசாக பேசி பாலியல் பலாத்கார முயற்சி யில் ஈடுபட்டதாக தெரிகிறது. உடனே உஷாரான சிறுமி அலறியடித்தபடி அவரிட மிருந்து தப்பித்து வெளியே வந்தார். இதற்கிடையே விஜயன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்தநிலையில் நடந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். அதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து காரைக்கால் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப் பாளர் விமலா விடம் அவர்கள் புகார் செய்தனர். இதனை யடுத்து அவரது தலைமையிலான குழுவினர் சிறுமியிடம் விசாரித்த னர்.

இதில் சிறுமியிடம் விஜயன் பாலியல் பலாத் கார முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் விமலா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயனை தேடி வந்தனர்.

இதனை அறிந்த விஜயன் சைல்டு-லைன் மற்றும் போலீசாரின் விசார ணைக்கு பயந்து தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த அவரது உறவினர்கள் விஜயனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயன் உயிரிழந் தார்.

இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடு பட்டு போலீஸ் விசாரணைக்கு பயந்து விடுதி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோட்டுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story