சென்னையில் இருந்து திருவாரூர் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு

சென்னையில் இருந்து திருவாரூர் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு
x
தினத்தந்தி 29 May 2020 5:25 AM IST (Updated: 29 May 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து திருவாரூர் வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.

திருவாரூர், 

சென்னையில் இருந்து திருவாரூர் வந்த 2 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

சென்னை திருவான்மியூரில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பொரசக்குடியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க 2 பேர் பணி நிமித்தமாக தங்கி இருந்தனர். அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தபோது உபயவேதாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

44 ஆக உயர்வு

புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 33 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இதனால் 11 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story