கெலவரப்பள்ளி அணையில் இடது, வலது புற கால்வாய் புனரமைப்பு பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு


கெலவரப்பள்ளி அணையில் இடது, வலது புற கால்வாய் புனரமைப்பு பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 29 May 2020 7:00 AM IST (Updated: 29 May 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இடது மற்றும் வலது புற கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள், ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் தொடங்கின. இதனை, கலெக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 11 பணிகளுக்கு ரூ.5.63 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பணிகளும் 2 மாதங்களுக்குள் முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கெலவரப்பள்ளி அணையில் புனரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், துறை அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். இதேபோல், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கடவரஹள்ளி அணைக்கட்டில் ரூ.55 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதை கலெக்டர் பார்வையிட்டார். 

Next Story