தர்மபுரியில் அரசு நர்சிங் கல்லூரி தொடங்க நடவடிக்கை; அமைச்சர் தகவல்
தர்மபுரியில் அரசு நர்சிங் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரவி, கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, நலப்பணிகள் இணை இயக்குனர் ஸ்டீபன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் சாமிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மகப்பேறு மற்றும் தாய்-சேய் நல சிகிச்சை பிரிவு 4 தளங்கள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இந்த கட்டிடத்தில் அமைய உள்ள வசதிகள் குறித்து கலெக்டர் மலர்விழி, பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவு கண்காணிப்பு பொறியாளர் இளஞ்செழியன் ஆகியோர் விளக்கினார்கள். இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 12,462 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 7,363 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போது 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு எதுவும் ஏற்படவில்லை. கொரோனா தடுப்பு பணியை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் தனியார் மருத்துவமனைகள் இயங்காத நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவங்கள் வழக்கம்போல் நடைபெற்றுள்ளன. பிரசவத்தின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதற்காக தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு தமிழக அரசு பாராட்டு தெரிவித்து உள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவ பாடப்பிரிவுகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தர்மபுரியில் அரசு நர்சிங் கல்லூரி தொடங்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரவி, கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, நலப்பணிகள் இணை இயக்குனர் ஸ்டீபன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் சாமிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story