வங்கிகளில் முன்னுரிமை கடனாக ரூ.5,884 கோடி வழங்க இலக்கு கலெக்டர் அன்பழகன் தகவல்
கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 2020-21-ம் ஆண்டிற்கான முன்னுரிமை கடனாக ரூ.5884.26 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டு பேசினார்.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 2020-21-ம் ஆண்டிற்கான முன்னுரிமை கடனாக ரூ.5884.26 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்திற்கு 2020-21-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட தனியார் கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகள் வழியாக வேளாண் கடனாக ரூ.2,803.43 கோடியும், சிறுகுறு மற்றும் நடுத்தர வர்க்க தொழில் மற்றும் ஏற்றுமதி கடனாக ரூ.1,558.55 கோடியும், இதர முன்னுரிமை கடனாக ரூ.1,522.28 கோடியும் என்று மொத்தம் ரூ.5,884.26 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இலக்கை விட ரூ.872.74 கோடி அதிகமாகும்.
வங்கிகள் சென்ற ஆண்டைப் போலவே 2020-21-ம் ஆண்டிற்கான கடன் இலக்கையும் எய்திட அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார். இதில், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், பொதுமேலாளர் மாவட்ட தொழில் மையம் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story