திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் ஐ.ஜி. ஆய்வு
மும்பையில் இருந்த தமிழர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு ரெயில் மூலம் விழுப்புரம் வந்தனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் பகுதியை சேர்ந்த 114 பேர், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்ததில், 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள், அரசு கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் முக கவசம் அணிந்துள்ளார்களா? அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் காமராஜ், டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story