அறந்தாங்கி ஒன்றியத்தில் பிளச்சிங் பவுடர், ஸ்பிரேயர் போன்றவை வாங்கியதில் முறைகேடு? ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு


அறந்தாங்கி ஒன்றியத்தில் பிளச்சிங் பவுடர், ஸ்பிரேயர் போன்றவை வாங்கியதில் முறைகேடு? ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 May 2020 10:48 AM IST (Updated: 29 May 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி ஒன்றியத்தில் பிளச்சிங் பவுடர், ஸ்பிரேயர் போன்றவை கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டினார்.

அறந்தாங்கி, 

அறந்தாங்கி ஒன்றியத்தில் பிளச்சிங் பவுடர், ஸ்பிரேயர் போன்றவை கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் குற்றச்சாட்டினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

அறந்தாங்கி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதம் நடைபெற்றபோது, கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து பேசினார்கள்.

அப்போது 22-வது வார்டு கவுன்சிலர் வெள்ளைச்சாமி(தி.மு.க.) பேசுகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து ஊராட்சியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஊராட்சியில் 700 ரூபாய்க்கு வாங்கக்கூடிய பிளச்சிங் பவுடர் ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டு உள்ளது. மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர் ஒன்றின் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரைதான் இருக்கும். ஆனால் ஊராட்சிகளில் ரூ.13 ஆயிரத்துக்கு ஸ்பிரேயர் வாங்கி உள்ளனர்.

குற்றச்சாட்டு

இதேபோல் முக கவசம், சானிடைசர் என அனைத்தும் விலை கூடுதலாக வாங்கியதாக கணக்கு எழுதி உள்ளனர். இவற்றுக்கு ஒன்றிய நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று குற்றம் சாட்டினார்.

7-வது வார்டு கவுன்சிலர் குழந்தைசெல்வன்(அ.தி.மு.க.) பேசுகையில், ஊராட்சி பகுதியில் நடைபெறும் சாலை பணிகள் உள்ளிட்ட எந்த பணிகள் குறித்தும் எங்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. ஊராட்சியில் நடைபெறும் பணிகளை எங்களுக்கு தெரிவித்து, சேர்ந்து பணி செய்ய வேண்டும், என்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சி) பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story