அமைச்சுப் பணியாளர்களுக்கு போலீசார் ‘சல்யூட்’ அடிக்க தேவையில்லை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


அமைச்சுப் பணியாளர்களுக்கு போலீசார் ‘சல்யூட்’ அடிக்க தேவையில்லை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 May 2020 6:10 AM GMT (Updated: 29 May 2020 6:10 AM GMT)

அமைச்சுப் பணியாளர்களுக்கு போலீசார் சல்யூட் அடிக்க தேவையில்லை என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர்,

அமைச்சுப் பணியாளர்களுக்கு போலீசார் சல்யூட் அடிக்க தேவையில்லை என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

சல்யூட்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அதில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருகை தரும் போலீசார், அங்கு பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ‘சல்யூட்‘ அடிப்பதாக தெரிய வருகிறது. அமைச்சுப் பணியாளர்களுக்கு ‘சல்யூட்‘ அடிப்பது சீருடை விதிகளுக்கு எதிரானது. அமைச்சுப் பணியாளர்களை போலீசார் சந்திப்பதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.

மேலும், யாராவது அமைச்சுப் பணியாளர்களுக்கு சல்யூட் அடிப்பது போன்ற விதிமீறிய செயலில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்கள் மீது சீருடை விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் என்னிடம் நேரில் தெரிவிக்கலாம். மேலும், ஆன்லைன் மூலமாகவும் மற்றும் புகார் பெட்டியில் செலுத்தியும் நிவாரணம் பெறலாம். இதை தவிர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் வேறு எந்த பிரிவுக்கும் செல்ல தேவையில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி

போலீசாரின் உள் அலுவலக விவகாரம் தொடர்பான உத்தரவுகள் வழக்கமாக வாய்மொழி உத்தரவாகவே பிறப்பிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அலுவலக உள் விவகாரம் தொடர்பாக எழுத்து மூலம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளதால், அது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story