பவானிசாகர் பேரூராட்சி ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைப்பு


பவானிசாகர் பேரூராட்சி ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 29 May 2020 12:03 PM IST (Updated: 29 May 2020 12:03 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று பவானிசாகர் பேரூராட்சிக்கு சொந்தமான ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

சத்தியமங்கலம்,

பவானிசாகர் அணை முன் பகுதியில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. புதிய பாலம் கட்ட வசதியாக பவானிசாகர் பேரூராட்சிக்கு சொந்தமான ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசுக்கு பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன். எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

மேலும் இதுதொடர்பான கோரிக்கை மனுவும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது.

எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் பேரூராட்சிக்கு சொந்தமான ரோட்டை கடந்த 23-ந் தேதி முதல் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பான உத்தரவு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சென்னை உயர் அதிகாரியிடம் இருந்து கடிதம் மூலம் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த உத்தரவில், ‘புஞ்சைபுளியம்பட்டி- பவானிசாகர் சாலை எல்லையில் இருந்து பவானிசாகர் பஸ் நிலையம் வரை 1.40 கிலோ மீட்டர் மற்றும் பவானிசாகர் பஸ் நிலையம் முதல் அணை வரை 2 கிலோ மீட்டர் என மொத்தம் 3.40 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது,’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவலை எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

Next Story