அரியலூரில் இருந்து ஆந்திராவை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு


அரியலூரில் இருந்து ஆந்திராவை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 29 May 2020 12:12 PM IST (Updated: 29 May 2020 12:12 PM IST)
t-max-icont-min-icon

கடந்த பிப்ரவரி மாதம் நாட்டு மருந்துகளை விற்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர்.

கீழப்பழுவூர்,

கடந்த பிப்ரவரி மாதம் நாட்டு மருந்துகளை விற்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள திரவுபதை அம்மன் கோவில் திடலில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். 

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் மருந்துகளை வியாபாரம் செய்ய முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். அவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். 

ஆனால், உடனே நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் சம்பவத்தன்று கீழப்பழுவூர் வழியாக காரில் சென்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம் தங்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

இந்நிலையில் கலெக்டரின் நடவடிக்கையின் பேரில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று முன் தினம் திருச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story