ஓய்வு பெற 3 நாட்கள் இருந்தநிலையில் கொரோனாவுக்கு தீயணைப்பு படை வீரர் பலி
ஓய்வு பெற 3 நாட்கள் இருந்த நிலையில் கொரோனாவுக்கு தீயணைப்பு படை வீரர் பலியானார்.
மும்பை,
மும்பை கோரேகாவ் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரபீக் சேக்(வயது57). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ரபீக் சேக் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கடந்த 21-ந் தேதி அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர் ரபீக் சேக் விராரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு உயிரிழந்த ரபீக் சேக் இந்த (மே) மாதத்துடன் ஓய்வு பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற 3 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் வீரர் ஒருவர் நோய் தொற்றுக்கு உயிரிழந்த சம்பவம் தீயணைப்பு துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை மும்பையில் 41 தீயணைப்பு வீரர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Related Tags :
Next Story