சென்னையில் இருந்து திருவாரூர் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்வு


சென்னையில் இருந்து திருவாரூர் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 May 2020 4:44 AM IST (Updated: 30 May 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர், 

சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டத்துக்கு வந்த 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து வந்தவர்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்த 7 பேர் சென்னை திருவான்மீயூர் பகுதியில் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் கடந்த 23-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். இவர்களுக்கு முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் கடந்த 26-ந் தேதி 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

13 பேருக்கு சிகிச்சை

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இருவரும் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் ஆவர். 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இதில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். நேற்றைய நிலவரப்படி 13 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story