கொடைக்கானலில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் குருசடி என்ற இடத்தில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை கொட்டியது. பின்னர் இரவில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது. இதற்கிடையே கொடைக்கானல் குருசடி என்ற இடத்தின் அருகில் வத்தலக்குண்டு செல்லும் சாலையில் இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

Related Tags :
Next Story