மாவட்ட செய்திகள்

சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை + "||" + Mango dealer beaten to death in Senthamangalam

சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை

சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை
சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த தாய், மகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சிவியாரத்தெருவை சேர்ந்தவர் மொட்டையாண்டி (வயது 62), மாங்காய் வியாபாரி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த புஷ்பராணி, இவரது மகள் காயத்ரி ஆகியோருக்கும், வீட்டு முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.


இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் நடந்த தகராறின்போது புஷ்பராணியும், காயத்ரியும் தடியால் மொட்டையாண்டியை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான புஷ்பராணி, காயத்ரி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச போலீசார் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் 8 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
2. போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கைது: மத்திய பிரதேசத்தில் சிக்கினான்
உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 8 போலீஸ்காரர்கள் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
3. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
4. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது
நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.