சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சேலம் பராமரிப்பு கோட்ட நிர்வாக பொறியாளர் குணசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ஆத்தூர்- நரசிங்கபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கீழ்கண்ட இடங்களில் 2 நாட்களுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதாவது இந்த திட்ட பயனாளிகளான ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் ஆகிய இரு நகராட்சி பகுதிகளிலும், மேச்சேரி, ஓமலூர், கருப்பூர், கன்னங்குறிச்சி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், பி.என்.பட்டி, பேளூர், வனவாசி, நங்கவள்ளி, தாரமங்கலம், கெங்கவல்லி, கீரிப்பட்டி, செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, தெடாவூர், வீரகனூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், ஓமலூர், சேலம், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் தடைபடும்.
எனவே குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் இந்த 2 நாட்களுக்கு உள்ளூரில் உள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Tags :
Next Story