கோவை ஓமியோபதி மருத்துவ சங்கம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்


கோவை ஓமியோபதி மருத்துவ சங்கம் சார்பில்   அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள்
x
தினத்தந்தி 30 May 2020 8:19 AM IST (Updated: 30 May 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஓமியோபதி மருத்துவ சங்கம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

ஊட்டி,

கோவை ஓமியோபதி மருத்துவ சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஓமியோபதி மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். டாக்டர்கள் ஜெய்கர் பீட்டர் ராஜ், பிபின், வர்கீஸ் ஆகியோர் அரசு ஊழியர்களுக்கு வழங்க நோய் எதிர்ப்பு சக்திக்காக ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ என்ற மாத்திரைகளை கலெக்டரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கலெக்டர், மாத்திரைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலாவிடம் வழங்கினார்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, அரசு ஊழியர்கள், தபால் நிலைய ஊழியர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள், போலீசார் உள்பட 3,000 பேருக்கு வழங்க மாத்திரைகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. காலையில் சாப்பிடுவதற்கு முன்பு 3 மாத்திரைகள் என 3 நாளைக்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகள், மாற்று மருந்துகள் எடுப்போர் என அனைவரும் இந்த மாத்திரைகளை உட்கொள்ளலாம். மாத்திரை சாப்பிடும் நாட்களில் காபி குடிக்க வேண்டாம். ஓமியோபதி மருந்துகள் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றனர்.

Next Story