கூடலூரில் சாலை தடுப்பில் மோதிய சரக்கு லாரி போக்குவரத்து பாதிப்பு


கூடலூரில் சாலை தடுப்பில் மோதிய சரக்கு லாரி  போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2020 8:48 AM IST (Updated: 30 May 2020 8:48 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலை தடுப்பில் மோதிய சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று காலை 6 மணியளவில் சரக்கு லாரி ஒன்று கர்நாடகா நோக்கி சென்றது. செவிடிப்பேட்டையில் சாலையில் நடுவில் உள்ள தடுப்பு கல்லில் சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சரக்கு லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தடுப்பு கல்லும் உடைக்கப்பட்டது. இதையடுத்து தடுப்பு கல் மற்றும் சரக்கு லாரி ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story