மக்களின் துயரங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்; சேலத்தில் வானதி சீனிவாசன் பேட்டி
சேலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனை சந்திக்க வந்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சேலம்,
வானதி சீனிவாசன் அப்போது கூறுகையில், கொரோனா ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொது மக்களுக்கு உணவு, கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். அவர்களாகவே தங்களை ஒருங்கிணைப்பு செய்து இதுபோன்ற உதவிகளை வழங்கினர்.
மோடி கிச்சன் என்று ஆரம்பித்து கடந்த 2 மாதங்களில் தினமும் 2 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த அவசரகால சூழ்நிலையில் தமிழக மக்களின் துயரங்களை புரிந்துகொண்டு யார் உதவி செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும். ஆனால் மக்களின் துயரங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்தவுடன் மக்களுக்கு சேவை செய்ததால், தமிழக மக்கள் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுப்பார்கள், என்றார்.
மேலும் பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று பிற்பகல் கே.என்.லட்சுமணனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

Related Tags :
Next Story