பள்ளபாளையம் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


பள்ளபாளையம் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 May 2020 10:08 AM IST (Updated: 30 May 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில், பள்ளபாளையம் ராஜவாய்க்கால் உள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில், பள்ளபாளையம் ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சத்து 50் ஆயிரம் மதிப்பில், தடுப்புச்சுவர் கட்டுதல், முட்புதர்களை அகற்றி தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்து பார்வையிட்டார். 

பின்னர் அவர் கூறுகையில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு காவிரி வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட புஞ்சைபுகளூர் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 

நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து, கரூர் மாவட்டத்தில் அதிக பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் செல்லும் புஞ்சைபுகளூர் வாய்க்காலை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிக்காகவும், மதகுகளை சரிசெய்யும் பணிக்காகவும் ரூ.41 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார், என்றார்.

Next Story