ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரம் பேர் மனுக்களை கலெக்டரிடம் வழங்கி உள்ளோம் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்


ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரம் பேர் மனுக்களை கலெக்டரிடம் வழங்கி உள்ளோம் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 30 May 2020 10:22 AM IST (Updated: 30 May 2020 10:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரம் பேர் மனுக்களை கலெக்டரிடம் வழங்கி உள்ளோம் என்று சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண்ணனிடம் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் கோரிக்கை அடங்கிய மனுக்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 18 லட்சம் கோரிக்கை மனுக்கள் தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 70 ஆயிரம் மனுக்களுக்கு நடவடிக்கை கோரி கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். மாவட்டம் முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் வரை நிவாரணம் வழங்கி உள்ளோம். கோரிக்கை மனுக்கள் கொடுத்தவர்கள் மட்டுமல்லாது பசியால் வாடும் ஆதரவற்றோரையும், ஏழை மக்களையும் தேடிச்சென்று உதவிகள் வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தங்கம்தென்னரசு, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story