மும்பையில் இருந்து அரியலூர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா


மும்பையில் இருந்து அரியலூர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 May 2020 6:12 AM GMT (Updated: 30 May 2020 6:12 AM GMT)

மும்பையில் இருந்து அரியலூர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர், 

மும்பையில் இருந்து அரியலூர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 362 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 355 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பேரில், 6 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26-ந் தேதி 76 பேரின் சளி மாதிரிகளை சுகாதாரத்துறையினர் எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியிருந்தனர். இதில் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து அரியலூர் திரும்பிய 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் தாலுகா குமிழங்குழியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அரியலூர் மாவட்டத்தில் 52 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 139 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் மாறி, பச்சை மண்டலத்திற்குள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனைக்காக 6 பேரின் சளி மாதிரிகள் சுகாதாரத்துறையினால் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Next Story