திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இதுவரை 7,710 வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இதுவரை 7,710 வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இதுவரை 7,710 வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2,010 பேர் வருகை
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
மராட்டிய மாநிலம் சோலாபூரிலிருந்து தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 962 பேர் வந்தனர். அவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 28 பேர் ஆவர். டெல்லியிலிருந்து சிறப்பு ரெயில் மூலம் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 458 பேர் வந்தனர். இதில் 57 பேர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். புனேயிலிருந்து சிறப்பு ரெயில் மூலம் பல்வேறு மாவட்டங்களை 352 பேர் வந்தனர். அவர்களில் திருச்சியை சேர்ந்தவர்கள் 15 பேர் ஆவர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 238 பேர் திருச்சி வந்தனர். அவர்களில் 37 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள். மொத்தம் 2,010 பேர் வெளி மாநிலத்திலிருந்து சிறப்பு ரெயில் மூலம் திருச்சி ரெயில்வே ஜங்ஷனுக்கு வந்துள்ளனர்.
7,710 பேர் அனுப்பி வைப்பு
இதுபோல திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு கடந்த 17-ந் தேதி 1,464 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் திருச்சி மாவட்டத்தில் வசித்தவர்கள் 1,023 பேர் ஆவர். பீகார் மாநிலம் பாபுதான்மொதிகாரிக்கு சிறப்பு ரெயில் மூலம் 1464 பேரும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு 612 பேரும், டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 1,440 பேர், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 1,374 பேர், 27-ந் தேதி பீகாருக்கு 1,356 பேர் என மொத்தம் 7,710 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் திருச்சியில் வசித்தவர்கள் மட்டும் 328 பேர் ஆவர்.
கப்பல், விமானம்
மேலும் திருச்சி மாவட்டத்திற்கு விமானம், கப்பல் மற்றும் பஸ்கள், ரெயில்கள் மூலமாக 2,580 பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 470 பேர் ஆவர் என்று கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story