கோவை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது


கோவை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 31 May 2020 6:15 AM IST (Updated: 31 May 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

போத்தனூர்,

கோவை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த சுந்தராபுரம் அருகில் உள்ள மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். செயலாளராக உள்ளார். இவர் மதுக்கரை சாலையில் மரச்செக்கு எண்ணெய் கடை நடத்தி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள தனது கடையில் இருந்தபோது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் சிலர் அவரை அரிவாளால் வெட்டினார்கள். அதன்பின்னர் மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அனீபா என்பவரை ஏற்கனவே கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இதில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கோவை தெற்கு உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக்(வயது 28) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் நேற்றுக்காலை கோவைமாநகர தெற்கு பகுதி உதவி கமிஷனர் செட்ரிக் இமானுவேல் உத்தரவின்பேரில் போத்தனூர் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இதில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story