நாளை முதல் திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் கவுண்ட்டரில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
திண்டுக்கல் வழியாக நாளை (திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு ரெயில் நிலைய கவுண்ட்டரில் தொடங்கியது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் வழியாக நாளை (திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு ரெயில் நிலைய கவுண்ட்டரில் தொடங்கியது.
கவுண்ட்டரில் முன்பதிவு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக ரெயில், பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. எனவே, பொதுமக்களின் பயன்பாட்டுக்கான ரெயில் சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிறப்பு ரெயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த ரெயில்களில் சமூக இடைவெளியுடன் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கப்படுகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுத்து மட்டுமே சிறப்பு ரெயில்களில் செல்ல முடியும். அதுவும் கவுண்ட்டர்களில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இதையொட்டி ரெயில் நிலையங்களில் தேவையான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்துள்ளது.
திண்டுக்கல் வழியாக...
இதில் திண்டுக்கல் வழியாக மதுரை-விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மதுரை- விழுப்புரம் ரெயில் காலை 7.58 மணிக்கும், மறுமார்க்கத்தில் விழுப்புரம்-மதுரை ரெயில் இரவு 8 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு வருகிறது. அதேபோல் திருச்சி- நாகர்கோவில் ரெயில் காலை 7.13 மணிக்கும், மறுமார்க்கத்தில் நாகர்கோவில்- திருச்சி ரெயில் இரவு 8.28 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு வருகிறது.
இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத பலர் ஆர்வமுடன் வந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேநேரம் ரெயிலில் செல்வதற்கு முன்பு அனைத்து பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் முக கவசம் அணிய வேண்டும். அதேபோல் கைகழுவ கிருமிநாசினி மருந்து வழங்கப்படும். இதையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
Related Tags :
Next Story