திருப்பூரில் 2 மாத குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை
திருப்பூரில் 2 மாத பெண் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்,
திருப்பூரில் 2 மாத பெண் குழந்தை உள்பட 4 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத மாவட்டம்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், கொரோனா சந்தேகம் ஏற்படுகிறவர்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள் என பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து, வீடு திரும்புகிறார்கள். தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருந்து வருகிறது.
4 பேருக்கு பரிசோதனை
இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மும்பையில் இருந்து திருப்பூர் வந்த கருவம்பாளையம் கே.வி.ஆர்.நகரை சேர்ந்த 21 வயது பெண், 28 வயது ஆண் மற்றும் முருகம்பாளையத்தை சேர்ந்த 2 மாத பெண் குழந்தை, அவினாசி நல்லகாளிபாளையத்தை சேர்ந்த 27 வயது பெண் ஆகிய 4 பேருக்கு கொரோனா பரிசோதனை (ஸ்வாப்) செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும்.
இதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story