குடிமராமத்து திட்டத்தின்கீழ் குளத்தூர், சிறுவயல் கண்மாய்கள் சீரமைப்பு
குடிமராமத்து திட்டத்தின்கீழ் குளத்தூர் கண்மாய் ரூ.80 லட்சம் செலவிலும், சிறுவயல் கண்மாய் ரூ.99.98 லட்சம் செலவிலும் சீரமைக்கப்பட உள்ளது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியனில் பொதுப்பணித்துறையின்கீழ் உள்ள 7 கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. இதன்படி குளத்தூர் கண்மாய் ரூ.80 லட்சம் செலவிலும், சிறுவயல் கண்மாய் ரூ.99.98 லட்சம் செலவிலும் சீரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நயினார்கோவில் யூனியன் தலைவர் வினிதா குப்புச்சாமி, துணைத்தலைவர் ஜெயபாலன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில் மாவட்ட இலக்கிய அணி தலைவர் நல்லதம்பி, பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் துரை வினோத், ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், ஊராட்சி தலைவர்கள் மும்முடிசாத்தான் விஜயன்,சிறுவயல் வள்ளி ராமசாமி, குளத்தூர் நாகலட்சுமி பாலசுப்பிரமணியன், போகலூர் ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் முருகன், நயினார்கோவில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் தேத்தாங்கால் பூமிநாதன், பரமக்குடி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திக், சிறுவயல் சிவா, ராஜ்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story