செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா


செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Jun 2020 5:58 AM IST (Updated: 1 Jun 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் பொத்தேரி பகுதியில் 35 வயது வாலிபருக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது.

இவர்களுடன் சேர்த்து நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 85 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை சிகிச்சை முடிந்து 610 பேர் வீடு திரும்பினர். 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பி.டி.ஓ. ஆபிஸ் சாலையை சேர்ந்த 60 முதியவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 407 ஆனது. இவர்களில் 232 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2 பேர் உயிரிழந்தனர். 173 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைபேர் ஊராட்சியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக உள்ளார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பஸ் டிரைவராக உள்ள நெய்வேலி ஊராட்சியை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் நேற்று கொரோனா உறுதியானதால் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 603 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story