கொரோனா விடுமுறை நாட்களில் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


கொரோனா விடுமுறை நாட்களில் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2020 6:18 AM IST (Updated: 1 Jun 2020 6:18 AM IST)
t-max-icont-min-icon

புதுவை உப்பளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன.

இத்தகைய சூழலில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் நேற்று வழங்கப்பட்டது. இதில் பஸ்கள் இயக்கப்படாத நாட்களை ஊழியர்களின் விடுமுறை நாட்களில் கழித்தும், போதிய விடுமுறை இல்லாத ஊழியர்களுக்கு பிடித்தம் செய்தும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டது.

இதை கண்டித்து புதுவை உப்பளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரகோத்தமன், துணைத்தலைவர் வேலு, தொ.மு.ச. தலைவர் சீனிவாசன், செயலாளர் சரவணன், துணை பொதுச்செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் கிளை மேலாளர் தேன்மொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் மனு கொடுத்தனர். அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story