மணல் கடத்திய 3 பேர் கைது


மணல் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2020 8:46 AM IST (Updated: 1 Jun 2020 8:46 AM IST)
t-max-icont-min-icon

மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சாங்கியம் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

திருக்கோவிலூர்,

 போலீசார் அப்போது அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளைதடுத்து நிறுத்து சோதனை நடத்தினர். இதில் அந்த மாட்டு வண்டிகளில் அப்பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மணல் கடத்தல் தொடர்பாக சாங்கியம் கிராமத்தை சேர்ந்த நாராயணன் (வயது 50), ஆனந்தன் (50), கோவிந்தராஜ் (53) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் வடியாங்குப்பத்தில் மணல் கடத்தி வந்தது தொடர்பாக ஒரு மாட்டு வண்டியை திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மணல் கடத்தல் தொடர்பாக முனியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story