சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி   பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Jun 2020 10:05 AM IST (Updated: 1 Jun 2020 10:05 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

போடி, 

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது மக்களுக்கு போதிய அளவில் இல்லை. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் பேரூராட்சி அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு, தங்கள் கிராமத்துக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தகவல் அறிந்ததும் போடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பெண்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story