தி.மு.க. எம்.பி.க்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் ஆகியோரை கண்டித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
துடியலூர்,
தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசிய தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் ஆகியோரை கண்டித்தும் அவர்களை கைது செய்யக்கோரியும் கோவை மாவட்டத்தில் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தி அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியில் நின்று கொண்டு, கையில் கருப்பு கொடி ஏந்தியவாறு இருந்தனர்.
சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சி, தொண்டாமுத்தூர் அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் காந்தி காலனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக தலித் முன்னேற்ற கழக கட்சி தலைவர் நாகராஜ், கவுன்சிலர் காளஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலாந்துறை அருகே சீனிவாசபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த செந்தில்குமார், செல்வராஜ், தெனமநல்லூரில் அ.தி.மு.க.வை சேர்ந்த சிங்காரவேலன், வேடப்பட்டி நாகராஜபுரத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையிலும், வெள்ளிமலைப் பட்டினத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திராவிட சிறுத்தைகள் கட்சி சார்பில் சூலூர் சந்தைப்பேட்டை சாலையில் உள்ள அரசு கருவூலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் பருவாய் சாமிநாதன், ஒன்றிய தலைவர் கருப்புசாமி, மாவட்ட செயலாளர் கணேசன், ஆறுமுகம், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல கோவை மாவட்ட ஆதித் தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சித்தாபுதூரில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஆதித்தமிழர் முன்னேற்ற கழக தலைவர் நாகராசன் தலைமை தாங்கி பேசினார்.
Related Tags :
Next Story