நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சீர்காழி,
நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சுகாதார பணிகள்
நாகை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவர் கரை கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபரும், ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியும் கடந்த சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர் 2 பேரையும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன், சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளுக்கு சென்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
கொரோனா தொற்று உறுதி
இதேபோல் நாகூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். கடந்த 29-ந்தேதி அந்த பெண் நாகூருக்கு வந்தார். அப்போது மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல காஞ்சீபுரத்தில் இருந்து தேத்தாகுடி தெற்கு பகுதிக்கு வந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story